--- --:--:-- --

காஷ்மீரில் 5 ராணுவ வீரர்கள் வீரமரணம்..!

6

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற மூன்று வெவ்வேறு மோதல்களில் பாதுகாப்பு படையினர் 5 பேரும் பயங்கரவாதிகள் இருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.

 

பூஞ்ச் மாவட்டத்தின் சதாரா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து ராணுவமும் காவல் துறையினரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள் அவர்களை சுட்டதில் ஒரு அதிகாரியும், 4 வீரர்களும் வீரமரணம் அடைந்தனர்.

 

இதையடுத்து பயங்கரவாதிகள் அருகில் இருக்கும் கிராமத்தில் தஞ்சம் அடைந்து இருப்பதாகவும் அவர்களை பிடிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் தப்பிச் செல்வதற்கான அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon