--- --:--:-- --

பொறியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வருகிற 25-ஆம் தேதி தொடக்கம்..!

7

பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வருகிற 25-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

 

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் நடப்பு கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் காலியிடங்கள் இருக்க வாய்ப்பில்லை என கூறியுள்ளார்.

 

பயோ-டெக்னாலஜி படிப்பிற்கு நிதி ஒதுக்கக்கோரி மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம் எழுத உள்ளதாகவும் மத்திய அரசின் நிதிகிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் 69 சதவீத இட ஒதுக்கீட்டின் படி மாணவர் சேர்க்கை நடைபெறும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

 

7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் படி பொறியியல் படிப்பில் இதுவரை 5 ஆயிரத்து 970 பேர் சேர்ந்து உள்ளதாகவும், அவர்களிடம் கட்டணம் வசூலித்தால் கல்லூரிக்கு அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளார்.

 

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்பதால் 3,443 கவுரவ விரிவுரையாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon