--- --:--:-- --

கால்நடை மருத்துவக் கல்லூரியில் 13 மாணவர்களுக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி..!

3

சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் 13 மாணவர்களுக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வரும் மாணவர்களுக்கு கடந்த 13ஆம் தேதி தொற்று செய்யப்பட்டதையடுத்து அந்த கல்லூரியில் உள்ள 570 நபர்களுக்கும் கொரொனா தொற்று சோதனை செய்யப்பட்டது.

 

இதில் 12 மாணவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 12 நபர்களுக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து அவர்கள் வேப்பேரி சித்த மருத்துவமனை மருத்துவ மையத்தின் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

தற்போது கல்லூரி மற்றும் வளாகம் முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon