--- --:--:-- --

6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் முதல் வாரத்தில் பள்ளிகள் திறப்பா..?

2

தமிழகத்தின் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் முதல் வாரத்தில் பள்ளிகளை திறக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை பரிந்துரைத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளி திறப்பது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் உடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தியிருந்தார்.

 

இந்த ஆலோசனையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முதலமைச்சர் மு க ஸ்டாலினிடம் ஒப்படைத்தார். இந்த அறிக்கையில் முதற்கட்டமாக ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் முதல் வாரத்தில் பள்ளிகளை திறக்க உள்ளதாக தெரிகிறது.

 

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளி திறப்பது குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் முடிவெடுப்பார் என கூறியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon