வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்ட லாரி..!
ஆந்திர மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தரைப்பாலத்தின் மீது சென்ற சிமெண்ட் லாரி அடித்து செல்லப்பட்டது. ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
முதிக்குப்பா எனுமிடத்தில் தரைப்பாலத்தின் மீது வெள்ளம் அதிகரித்துள்ளது. தரை பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த சிமெண்ட் ஏற்றிய லாரி நீரில் அடித்து செல்லப்பட்டது. அதிர்ஷ்டவசமாக காரினுள் இருந்த ஓட்டுநர் கிளீனர் ஆகியோர் உயிர் தப்பியுள்ளனர்.






