--- --:--:-- --

கேரளாவில் இருந்து தமிழ்நாடு வந்தால் கொரொனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்..!

8

கேரளாவில் இருந்து தமிழ்நாடு வருபவர்கள் ஆர்‌டிபிசிஆர் பரிசோதனை சான்று அல்லது தவணை தடுப்பூசி போடப்பட்ட சான்றுகள் கொண்டுவர வேண்டுமென மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் குழந்தைகளுக்காக ஐசியு படுக்கைகளை அமைச்சர்கள் மா சுப்பிரமணியன், சேகர்பாபு திறந்து வைத்தனர்.

 

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பள்ளிகளில் தடுப்பூசி போடுவதை தொடர்ந்து செயல்படுத்துவதில் எந்த சிக்கலும் இல்லை எனவும் கல்லூரிகளில் தடுப்பூசி முகாம்கள் அமைக்க திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

 

மேலும் கேரளாவில் இருந்து தமிழ்நாடு வரை போராடியவர்கள் ஆர்‌டி‌பி‌சி‌ஆர் பரிசோதனை, 2 தவணை தடுப்பூசி போடப்பட்ட சான்று கட்டாயம் எனவும் அவர் கூறியுள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் தடுப்பூசி முகாம்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon