இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்துள்ள பவீனா பட்டேல்..!
டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவீனா பட்டேல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை, சீன வீராங்கனை மோதினர். இந்த போட்டியில் சீன வீராங்கனையை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பவீனா பட்டேல்.
இதனையடுத்து பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார் பவீனா பட்டேல். இறுதிப்போட்டி விளையாட 100 விழுக்காடு தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.






