--- --:--:-- --

சுழற்சி முறையில் கல்லூரி வகுப்புகள் நடைபெறும்..!

1

மிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும் என உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரொனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.

 

இதையடுத்து கல்லூரியை திறப்பதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இளநிலை, கலை அறிவியல் கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டு மாணவர்களும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் கல்லூரிக்கு வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

 

முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் வகுப்புகள் நடைபெறுகின்றன. பொறியியல் படிப்புகளை பொருத்தவரையில் இறுதியாண்டு மாணவர்களுக்கு அனைத்து நாட்களும், இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில் விடுதிகளை திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது,

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon