பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் விசைப்படகு மோதி விபத்து..!
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் விசைப்படகு மோதி விபத்துக்குள்ளான நிலையில் மீனவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
ராமேஸ்வரம் தீவையும், நிலப்பரப்பையும் இணைக்கும் பாம்பன் பாலம் வழியே விசைப்படகுகள் செல்லும்பொழுது படகின் மேல் பகுதியை மீனவர்கள் நீக்கி விட்டு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் வடக்கு நோக்கி சென்ற படகொன்று அழுத்தம் காரணமாக ஒரு புறமாக இழுக்கப்பட்டு தூக்கு பாலத்தில் படகின் மேல் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. படகின் மேல் பகுதி முழுவதும் சேதமடைந்த நிலையில் அதிலிருந்து ஐந்து மீனவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.






