--- --:--:-- --

கதாநாயகியாக அறிமுகமாகி உள்ள அனிகா..!

13

மிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த அனிகா இதில் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அஜீத்தின் மகளாக நடித்து தமிழில் அறிமுகமானார் அணிகா.

 

என்னை அறிந்தால் படத்தில் தந்தை மகள் பாசம் இருவருக்கும் மிகச் சரியாக பொருந்தியிருந்த நிலையில் அடுத்த விசுவாசம் படத்தில் அஜித்தும் அனிகாவும் மீண்டும் தந்தை மகளாக நடித்தனர். இதில் கதாநாயகிகளுக்கு இணையாக போட்டோ ஷூட் நடத்தி வந்த அனிகா அவ்வப்போது அதனை இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.

 

இந்த நிலையில் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற கபிலா படத்தின் தெலுங்கு ரீமேக் ஆன புட்டபொம்மா படத்தில் அனிகா ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon