ஜிஎஸ்எல்வி- எஃப்10 ராக்கெட்டின் திட்டம் தோல்வியில் முடிந்தது..!
புவி கண்காணிப்பு பணிகளுக்காக இஓஎஸ்03 என்ற அதிநவீன செயற்கைகோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தயாரித்தது. இந்த செயற்கைக் கோளை ஜிஎஸ்எல்வி எஃப்10 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் நடைபெற்று வந்தன.
26 மணி நேர கவுண்ட்டவுன் நிறைவடைந்தது. இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 5.43 மணிக்கு ஜிஎஸ்எல்வி எஃப்10 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
ஆனால் சற்று நேரத்தில் எதிர்பாராத விதமாக கிரையோஜெனிக் என்ஜின் இல் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராக்கெட்டின் இத்திட்டம் முழுமை பெறவில்லை என இஸ்ரோ தலைவர் விஞ்ஞானி சிவன் அறிவித்தார்.
இதனால் செயற்கைக்கோளை சுமந்து சென்ற ஜிஎஸ்எல்வி எஃப்10 ராக்கெட்டின் திட்டம் தோல்வியில் முடிந்துவிட்டது.






