மீண்டும் முழு ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்பந்தித்து விடாதீர்கள்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


மீண்டும் முழு ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்பந்தித்து விடாதீர்கள் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் எச்சரித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் எச்சரிக்கையாக இருப்போம் மூன்றாவது அலையை தவிர்ப்போம் என்று பதிவிட்டுள்ளார்.

 

மாஸ்க் அணியாமல் செல்வது, கூட்டமாக கூடுவது, நெரிசலாக நிற்பதைப் பார்க்கும் பொழுது வேதனையை ஏற்படுத்துகிறது என அவர் தெரிவித்துள்ளார். கூட்டமாக கூடுவதன் மூலமாக பொருளாதார விளக்கம் மக்களை காரணமாகி விடக்கூடாது.

 

மீண்டும் முழு ஊரடங்கு சூழலுக்கு அரசாங்கத்தை நிர்பந்தித்து விடாதீர்கள் என்பதை கொஞ்சம் கடுமையாகவே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் எனவும் கூறியுள்ளார். முதல், இரண்டாம் அலைகளை விட மூன்றாவது அலை மோசமானதாகவே இருக்கும் எனவும் மிக மிக அவசிய அவசரத் தேவை இருந்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் எனவும் கூறியுள்ளார்.


Leave a Reply