உணவகத்தில் சாப்பாட்டில் பல்லி விழுந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!
திருச்செந்தூர் கோவில் அருகே உள்ள பிரபல உணவகத்தில் சாப்பாட்டில் பல்லி விழுந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோவில் மற்றும் நகர் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட உணவகங்கள் உள்ளன.
இந்த நிலையில் திருச்செந்தூர் கோவில் அருகே உள்ள பிரபல உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் இறந்த நிலையில் பல்லி கிடந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உணவக உரிமையாளருக்கு புகார் தெரிவித்துள்ளார்.
மேலும் இதனை பதிவு செய்த அவர் வெளியிட்டுள்ள வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






