சார்ஜ் போட்டு போன் பேசியபோது போன் வெடித்ததில் மாணவி பலி..!
குஜராத்தில் செல்போன் சார்ஜ் போட்டுவிட்டு பேசியபோது செல்போன் வெடித்தது பிளஸ்டூ மாணவி உயிரிழந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் சர்தேசாய். தனது செல்போனில் சார்ஜ் போட்டு பேசியுள்ளார்.
அப்போது திடீரென செல்போன் வெடித்ததில் படுகாயம் அடைந்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த நிலையில் பெற்றோர்கள் மகளின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் அடக்கம் செய்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து மாணவியின் வீட்டிற்கு வந்த போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.






