--- --:--:-- --

முதலமைச்சர் மற்றும் 6 உயர் அதிகாரிகள் மீது காவல்துறை வழக்குப்பதிவு..!

9

சாம் மாநில முதலமைச்சர் ஹிமாந்தா மிஷ்வா ஷர்மா மற்றும் அந்த மாநிலத்தை சேர்ந்த 6 உயர் அதிகாரிகள் மீது மிசோரம் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அசாம் மாநிலத்திலத்துடன் மிசோரம், மேகாலயா, நாகலாந்து, மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலங்களுக்கு நீண்டகாலமாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது.

 

இந்த நிலையில் கடந்த 28ஆம் நாள் மிசோரம் எல்லை கிராம மக்கள் காவல்துறையினர் மற்றும் அசாம் மாநில எல்லை கிராம மக்கள் இடையே நடந்த மோதலில் அஸ்ஸாம் மாநில காவலர்கள் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

 

மேலும் மோதலில் காயமடைந்த 50க்கும் மேற்பட்ட காவலர்கள் மருத்துவம் பெற்று வருகின்றனர். இதனால் இரு மாநிலங்களுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் கொலை செய்ய முயற்சித்தல் மற்றும் தாக்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் மாநில முதலமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon