2 வயது மாத குழந்தை உட்பட மேலும் மூவருக்கு ஜிகா வைரஸ் தொற்று..!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 22 மாத குழந்தை உட்பட மேலும் மூவருக்கு ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஜார்ஜ் இதுவரை 27 மாதிரிகள் இரண்டு பகுதிகளாக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
26 மாதிரிகள் நெகட்டிவ் வந்துள்ளதாக தெரிவித்த அவர் மேலும் மூன்றாவது பகுதியாக நேற்று 8 மாதிரிகள் கணக்கிடப்பட்டது. 22மாத குழந்தை உட்பட 3 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன் மூலம் மாநிலத்தில் 18 பேருக்கு தொற்று என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் திருவனந்தபுரம் திருச்சூர் மற்றும் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரிகளிலும் ஆலப்புழாவில் உள்ள தேசிய வளர்ச்சி நிறுவனம் பரிசோதனை வசதிகள் செய்யப்பட்டு உள்ளதாக கூறினார்.
கேரளாவில் பரவும் வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கேரளத்திற்கு உதவ மத்திய நிபுணர் குழு அந்த மாநிலத்திற்கு விரைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.






