--- --:--:-- --

நெட்டிசன்களின் கலாய் – சாலை பாதுகாப்புக்காக வரையப்பட்ட கோடு..!

12

திண்டுக்கல்லில் சாலை பாதுகாப்புக்காக வரையப்பட்ட கோடு குறித்த விமர்சனங்கள் எழுந்த நிலையில் அது தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

திண்டுக்கல் மாவட்டம் மணியகாரன் சாலையில் கிடக்கும் தென்னை மட்டையை சுற்றி பாதுகாப்பு கோடு வரையப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. சாலையோரம் கிடைக்கும் தென்னை மட்டைக்கு வழிவிட்டு பெயிண்ட் அடித்தவர் யார் என நெட்டிசன்கள் விமர்சித்தனர்.

 

ஆனால் அந்த இடத்தில் காவிரி குடிநீர் திட்ட குழாயில் இணைப்புக்கான கான்கிரீட் தொட்டி கட்டப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அங்கு செல்லும் வாகனங்கள் பள்ளத்தில் சிக்காமல் இருக்க தென்னை மட்டைகள் போட்டு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அங்கு சாலை அமைக்கும் முன்னரே பள்ளத்தை சரிசெய்யாதது ஏன் என அந்த பகுதி மக்கள் கேள்வி எழுப்பினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon