விமானப்படை ஊழியர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..!
சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள விமானப்படை தளத்தில் வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்றிய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான இந்த வளாகத்தில் உள்ள விமானப்படை தளத்தில் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் வழக்கம்போல் இன்று அவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.
அப்போது திடீரென அவர் இருந்த பகுதியில் துப்பாக்கி சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து வளாகத்தில் உள்ள மற்ற வீரர்கள் அங்கு விரைந்து வந்து பார்த்தபோது ஆகாஷ் தலையில் குண்டு பாய்ந்து இறந்து கிடந்தது தெரியவந்தது.
அவர் தனது கையில் வைத்திருந்த இன் ஷார்ட் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை தகவல் எதுவும் தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






