துருவ் விக்ரம் நடிக்க உள்ள புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்க உள்ள புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை தொடர்ந்து துருவ் விக்ரம் நடிப்பில் புதிய படத்தை மாரி செல்வராஜ் இயக்கவுள்ளார்.

 

சாதி ஒடுக்குமுறை, கல்வியின் முக்கியத்துவம் குறித்து அதிகமாக தன் படங்களில் பேசுகிறார். விக்ரமுடன் இணைந்து சியான் 60 படத்தில் நடித்து வரும் துருவ் விக்ரம் அடுத்ததாக மாரிசெல்வராஜ் படத்தில் நடிக்க உள்ளார்.

 

கபடி விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை இயக்குனர் பா ரஞ்சித் தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply