நடிகை சனம் ஷெட்டிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய மாணவர் கைது..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


டிகை சனம் ஷெட்டிக்கு சமூக வலைதளங்களில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய கல்லூரி மாணவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்த சனம் ஷெட்டி தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார்.

 

இந்தநிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நபர் ஒருவர் ஆபாச முறையில் குறுஞ்செய்திகளையும், படங்களையும் அனுப்பி வந்ததாக சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். இதுதொடர்பான ஆதாரங்களை சைபர் கிரைம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

 

இதுகுறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்ட போலீசார் ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பிய திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவரை கைது செய்தனர்.


Leave a Reply