நடிகை ஹன்சிகா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


டிகை ஹன்சிகா அடுத்ததாக நடித்து வரும் ஒரு புதிய படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஹன்சிகா நடிப்பில் 2019ஆம் ஆண்டு 100 என்ற படம் தமிழில் கடைசியாக வெளிவந்தது. இதையடுத்து பெரிதாக பட வாய்ப்பு இல்லாமல் எஇருந்து வருகிறார் ஹன்சிகா.

 

இறுதியாக தனது 50வது படமான மகா படத்தில் நடித்தார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதையடுத்து மை நேம் இஸ் ஸ்ருதி என்ற படத்தில் ஹன்சிகா நடிக்க உள்ளார்.

 

சீனிவாஸ் இயக்கும் இந்தப் படம் கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்த படத்தின் அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a Reply