மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி கிடைத்திட முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


ரசு நலத்திட்ட உதவிகளுக்காக காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு அந்த உதவிகள் கிடைத்திட செயலாற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவுறுத்துகிறார். மாற்றுத்திறனாளிகள் அத்துறை தொடர்பான ஆய்வுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

 

இதில் பேசிய முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை அரசு துறைகள் முனைப்புடன் செயல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறார்.

 

மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 4 விழுக்காடு இட ஒதுக்கீடு, உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் 5 விழுக்காடு இட ஒதுக்கீடு 20 நபர்களுக்கு மேல் பணிபுரியும் தனியார் நிறுவனங்களில் சம வாய்ப்புகள் வழங்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

 

மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு பேருந்துகளில் கட்டண சலுகை, வேலை வாய்ப்பற்றோருக்கு உதவித்தொகை, பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தி வருகிறார்.


Leave a Reply