மின்னல் தாக்கியதில் 3 பசுமாடுகள் பரிதாபமாக உயிரிழப்பு..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டி அருகே மின்னல் தாக்கியதில் 3 பசுமாடுகள் பரிதாபமாக உயிரிழந்தது. கயத்தாறு சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் மழை பெய்தது.

 

இந்த நிலையில் புதுக்கோட்டையை சேர்ந்த சௌந்தர் என்பவரின் நிறைமாத கர்ப்பிணி பசு மின்னல் தாக்கி உயிரிழந்தது. அதேபோலமுருகன் என்பவரின் இரண்டு பசு மாடுகளும் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது.

 

தற்காலத்தில் கால்நடைகளை நம்பியே வாழ்ந்த நிலையில் பசுமாடுகள் இறந்ததால் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


Leave a Reply