முதல்வர் விஜய்யின் பெரியம்மா மறைவுக்கு அஞ்சலி..!
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள திடீர் இழப்பு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் தந்தையும், பிரபல இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகரின் அண்ணன் மனைவியுமான அமல் ராஜசேகரன் (92) வயது மூப்பு காரணமாக காலமானார்.
சென்னை நீலாங்கரையில் உள்ள முதியோர் இல்லத்தில் வசித்து வந்த அவர், உடல்நலக்குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். சிறுவயதில் அவரிடம் பலமுறை நேரம் செலவிட்ட நினைவுகளைக் கொண்ட விஜய்க்கு இந்த மறைவு மிகுந்த வேதனையை அளித்துள்ளது.
அரசுப் பணிகள் மற்றும் தேவர் ஜெயந்தி உள்ளிட்ட பிஸியான பொது நிகழ்ச்சிகளுக்கு நடுவேயும், குடும்ப உறவுக்கு முக்கியத்துவம் கொடுத்து, உடனடியாக நீலாங்கரை முதியோர் இல்லத்திற்கு நேரில் சென்றார் முதலமைச்சர் விஜய். அங்கு வைக்கப்பட்டிருந்த தனது பெரியம்மாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.
முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு குடும்ப நிகழ்வில் அவர் தனியாக கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளது, பொதுமக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தையும் நெகிழ்ச்சியையும் பெற்றுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





