சைக்கிள் ஓட்டி போராட்டத்தில் கலந்துகொண்ட பிரேமலதா விஜயகாந்த்..!
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சைக்கிள் ஓட்டி சென்றார்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தேமுதிக சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரேமலதா விஜயகாந்த் சைக்கிளில் சென்றுள்ளார். ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய அவர் விலைவாசியைக் கட்டுப்படுத்துவது ஒன்றிய மாநில அரசுகளின் கடமை என்று தெரிவித்தார்.






