தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு வயது 5 ஆண்டுகள் அதிகரிப்பு
இளைஞர்களின் நலனைக் காக்கவும், போட்டித் தேர்வர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்றும் தமிழ்நாடு அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கு விதிகளில் நிர்ணயிக்கப்பட்ட வயதை 5 ஆண்டுகள் உயர்த்தித் தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இந்த வயது வரம்பு உயர்வானது, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (பி.சி, பி.சி.(எம்), எம்.பி.சி மற்றும் டி.என்.சி, எஸ்.சி, எஸ்.டி, ஆதரவற்ற விதவைகள்) ஏற்கனவே உள்ள வயதுச் சலுகையோடு கூடுதலாக அமையும். இதன் மூலம், குரூப்-1 தேர்வைப் பொதுப் பிரிவினர் 32 வயதுக்குப் பதிலாக 37 வயது வரை எழுத முடியும் என்றும், இந்த நடைமுறை அடுத்த 5 ஆண்டுகள் வரை அமலில் இருக்கும் என்றும் தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




