--- --:--:-- --

சிறையில் சரியான உணவு வழங்கவில்லை – அன்பில் தரப்பு வாதம்

10

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்றதாக வழக்கு . அன்பில் மகேஷை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. சிறையில் சரியான உணவு, மருந்துகள் வழங்கப்படவில்லை. சரியான உணவு வழங்காததால் உடல் எடை குறைந்தது.

 

குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி போல நடத்த வேண்டும். மாநில நலனுக்காக எனது குடும்பமே ரத்தம், வியர்வை அளித்துள்ளது. சிறையில் வீட்டு உணவு மற்றும் மருந்து வழங்க வேண்டும். நாங்கள் எங்கும் தப்பிவிட மாட்டோம். அஜ்மல் கசாப்க்கு கூட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்ட‌து.

 

 

சிறையில் தூங்கும்போதும் விளக்கு எரியவிடப்பட்ட‌து. போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். கஸ்ட‌டி அளித்தால் உச்சநீதிமன்ற உத்தரவு பின்பற்ற வேண்டும் என சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அன்பில் தரப்பு வாதம் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon