ம.நீ.ம நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் இன்று ஆலோசனை..!
மக்கள் நீதி மையம் கட்சியில் புதிய உயர்மட்ட நிர்வாகிகளை அந்த கட்சி தலைவர் கமலஹாசன் என்று அறிவிக்க உள்ளார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சி தான் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது.
இதைதொடர்ந்து கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் சிலர் கட்சியை விட்டு விலகினார். இது குறித்து கருத்து தெரிவித்த கமல்ஹாசன் மக்கள் நீதி மையம் தனது அரசியல் பயணத்தை ஒருபோதும் நிறுத்தாது என தெரிவித்தார்.
நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் இன்று காலை காணொளி மூலம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இதனையடுத்து கட்சியின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட உயர்மட்ட நிர்வாகிகளை கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.






