--- --:--:-- --

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா சிறையில் அடைப்பு..!

4

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா நீதிமன்ற காவலில் ஜூலை 1ஆம் தேதி வரை செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

கடவுளின் அவதாரம் என தன்னை வெளிப்படுத்திக் கொண்ட சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விமானம் மூலமாக சென்னை அழைத்து வரப்பட்டார். பின்னர் அவரிடம் நேற்று காலையில் தொடங்கி சுமார் 10 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்தனர்.

 

பள்ளி மாணவிகளின் புகார்கள், டேராடூனில் இருந்து தப்பிச் சென்ற விவகாரம் தொடர்பாக சிவசங்கர் பாபாவிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. அதன்பின் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு மருத்துவ பரிசோதனையில் கொரொனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

 

அங்கிருந்து சர்வதேச பள்ளிக்கு அழைத்து சென்று சிறிது நேரம் விசாரணை நடத்திய போலீசார் பின்னர் செங்கல்பட்டு மகிலா நீதிமன்ற நீதிபதி அம்பிகா முன் ஆஜர்படுத்தினர்.

 

அப்போது அங்கு திரண்டிருந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் சிவசங்கர் பாபாவை அடித்து முழக்கங்களை எழுப்பினர்.

 

நீதிமன்றத்துக்குள் நுழைய முயன்றவர்களை கைது செய்து அப்புறப்படுத்திய போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா சிறையில் அடைக்கப்பட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon