--- --:--:-- --

மூன்று இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட பெண்..!

4

திருப்பதியில் மூன்று இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு பணத்துடன் தப்பி ஓடிய பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த சுனில் குமார் என்ற இளைஞருக்கு கடந்த வருடம் நிதி நிறுவன ஊழியர் எனக்கூறி சுபாஷினி என்ற பெண் அறிமுகமாகியுள்ளார்.

 

இருவருக்கும் காதல் ஏற்பட்டு கடந்த டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர் .அப்போது சுனில்குமாரின் பெற்றோர் சுகாசினிக்கு 20 கிராம் தங்க நகையை வாங்கிக் கொடுத்துள்ளனர்.

 

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது நெருங்கிய உறவினரின் மருத்துவ செலவுக்கு பணம் தேவைப்படுவதாக சுனில்குமாரிடமிருந்து நான்கு லட்சமும் அவரிடம் தந்தையிடமிருந்து 2 லட்சமும் பணம் வாங்கிக்கொண்டு சுகாசினி மாயமாகிவிட்டார்.

 

பின்னர் விசாரித்ததில் சுகாசினிக்கு ஏற்கனவே நல்லூரை சேர்ந்த வெங்கடேஷ் என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தை இருப்பது தெரியவந்தது. இதனிடையே சுனில் குமார் எண்ணிற்கு தொடர்பு கொண்ட சுகாசினி தன்னைப்பற்றி காவல்துறையினரிடம் புகார் அளித்தால் விபரீதத்தை சந்திப்பீர்கள் என மிரட்டியுள்ளார்.

 

இதேபோல வேறு ஒருவரை திருமணம் செய்த புகைப்படங்களையும் சுனில்குமாரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு சுகாசினி அனுப்பியுள்ளார். இதையடுத்து சுனில்குமார் காவல் நிலையத்தில் சுகாசினி மீது புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர் சுகாசினியை தேடி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon