சபாநாயகர் அப்பாவு தொடர்ந்த வழக்கு திரும்பப் பெறப்பட்டன..!
முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, காமராஜருக்கு எதிராக சபாநாயகர் அப்பாவு தொடர்ந்த வழக்கு திரும்பப் பெறப்பட்டன. தமிழ்நாட்டின் தெருவிளக்குகளை எல்இடிகளாக மாற்றும் திட்டத்தில் முறைகேடு நிகழ்ந்ததாக கடந்த அதிமுக ஆட்சியின்போது அப்போதைய உள்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு எதிராக புகார் அளித்திருந்தார்.
கொரொனா காலத்தில் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா 5 கிலோ அரிசி கூடுதலாக வழங்க மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தாமல் குடும்ப அட்டைக்கு 5 கிலோ அரிசி மட்டும் வழங்கிவிட்டு மற்றவற்றை நவீன அரிசி ஆலைக்கு விற்றதாக அப்போதைய அமைச்சர் காமராஜுக்கு எதிராகவும் அப்பாவு புகார் அளித்திருந்தார்.
அவற்றின் மீது ஆளுநரின் ஒப்புதலைப் பெற்ற வழக்குபதிய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் 2 வழக்குகளை தொடுத்திருந்தார் . பொதுத்துறை செயலாளரின் அனுமதி பெற்ற பொது ஊழியர்களுக்கு எதிரான புகார் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று அரசுக்கு எதிராகவும் அப்பாவுவழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மூன்றும் வழக்குகளையும் திரும்பப் பெறுவதாக சபாநாயகராக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவை தள்ளுபடி செய்யப்பட்டன.






