தமிழ்நாட்டில் வரும் 14ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா..?

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


மிழ்நாட்டில் வரும் 14ஆம் தேதிக்கு பின்னர் ஊரடங்கை நீட்டிக்கலாமா என்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

 

கொரொனா இரண்டாவது அலை தீவிரமானதையடுத்து அமல்படுத்தப்பட்ட தளர்வில் முழு ஊரடங்கு கடந்த மாதம் பத்தாம் தேதி முதல் இந்த மாதம் 7ஆம் தேதி வரை அமலில் இருந்தது.

 

இதனைத் தொடர்ந்து கொரொனா பரவல் குறைந்ததால் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது வருகிற 14-ஆம் தேதி காலை 6 மணி வரையில் முழு ஊரடங்கை நீடித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டார். இதுபோன்ற சூழலில் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரொனாவின் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது.

 

கடந்த மாத இறுதியில் நாளொன்றுக்கு சுமார் 30,000 என்ற அளவில் பதிவான தொற்று தற்போது 15,000 என்கிற அளவுக்கு குறைந்துள்ளது. அதேநேரம் கோவை, ஈரோடு, சென்னை ஆகிய மாவட்டங்களில் மட்டும் தினசரி தொற்று தொடர்ந்து ஆயிரத்துக்கு மேல் பதிவாகியுள்ளது.

 

இந்த சூழலில் வருகிற 14-ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது கூடுதல் தளர்வுகளை அளிக்கலாமா என்பது குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

 

தலைமை செயலகத்தில் 11 மணிக்கு நடைபெறும் ஆலோசனையில் தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், பொது சுகாதாரத்துறை இயக்குனர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.


Leave a Reply