ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி என புகார் எழுந்துள்ளது..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


ன்னியாகுமரி அருகே புகார் அளிக்கச் சென்ற ஊராட்சி தலைவரை சார் ஆட்சியர் அலுவலகத்தில் புறக்கணித்ததாக செய்தி வெளியான நிலையில் மக்களிடையே இது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நியாய விலை கடைகளில் அரிசி தரமற்றதாக உள்ளதாக புகார்கள் வந்தன .

 

இதையடுத்து ஊராட்சி தலைவராக முரளிதரன் பச்சரிசியுடன் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் அலுவலகம் சென்றுள்ளார். அப்போது மனு கொடுக்கச் சென்ற அவரை சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அனுமதிக்க மறுத்து வெளியேறுமாறு சொன்னதாக தெரிகிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

ஏழை-எளிய மக்களுக்கு வழங்கப்படும் அரிசியை தரமானதாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஊராட்சி தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


Leave a Reply