காவலரிடம் ஒருமையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


சென்னையில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட காவலர்களிடம் ஒருவர் ஒருமையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வெளியாகியுள்ளது.

 

கோயம்பேடு மார்க்கெட்டில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்தனர். அதற்கு அந்த நபர் காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அடிக்க முற்பட்டதாக வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

 

கோயம்பேடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் சென்னையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆட்டோ ஓட்டுனர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.


Leave a Reply