டாஸ்மாக் கடைகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு என்ன..?
தமிழ்நாடு முழுவதும் மறு அறிவிப்பு வரும் வரை டாஸ்மாக் மது கடைகள் மூடப்பட்டு இருக்கும் என அதன் மேலாண்மை இயக்குனர் அறிவித்துள்ளார். கடந்த மாதம் 10-ஆம் தேதி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
இதனால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. அதன்பின்னர் ஊரடங்கு இரண்டு முறை நிறுத்தி வைக்கப்பட்டு கடைசியாக வரும் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டிருக்க வேண்டும் என்பதை மண்டல மாவட்ட மேலாளர்கள் உறுதிசெய்ய வேண்டுமென மேலாண்மை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.






