--- --:--:-- --

யோகி ஆதித்யநாத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரதமர் நரேந்திர மோடி..!

3

உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்காதது அந்த மாநில அரசியலில் பேசுபொருள் ஆகியுள்ளது.

 

உள்நாட்டின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் முதல்வர்கள் தொடங்கி வெளிநாட்டு தலைவர்கள் வரை பிறந்தநாளை ட்விட்டர் மூலம் வாழ்த்துக்களை தெரிவிப்பது பிரதமர் மோடியின் வழக்கம்.

 

ஆனால் இன்று பிறந்தநாள் கொண்டாடிய யோகி ஆதித்யநாத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவிக்காதது அவர்களுக்கு இடையே அதிருப்தி இருப்பதாக பேச வழி செய்துவிட்டது.

 

அடுத்தாண்டு தொடக்கத்தில் உத்திரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. இந்த சூழலில் யோகி ஆதித்யநாத் செயல்பாடுகள் குறித்து மாநில பாஜக தலைவர்கள் பலர் பிரதமரிடம் புகார் தெரிவித்து வருவது முக்கியத்துவம் பெறுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon