--- --:--:-- --

கல்லறையில் குழந்தையின் கையில் பட்டாக் கத்தியை கொடுத்து கேக் வெட்டி சபதம்..!

3

புதுச்சேரி அருகே கொலை செய்யப்பட்டு இறந்த நண்பரின் கல்லறையில் நண்பனின் குழந்தையின் கையில் பட்டாக் கத்தியை கொடுத்து கேக் வெட்டி எதிரிகளை பழி தீர்க்க பாடல் பாடி சபதம் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

புதுச்சேரி ராயப்பேட்டை சேர்ந்த நபர் கடந்த ஆண்டு முன்விரோதம் காரணமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் பாலசுப்பிரமணி, தணிகை அரசு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் தற்போது சிலர் ஜாமினில் வெளியே வந்துள்ளனர்.

 

பிறந்தநாளின் போது அவரது கல்லறையில் அவரது கூட்டாளிகள் குழந்தை கையில் பட்டா கத்தியை கொடுத்து கேக் வெட்டியுள்ளனர். அப்போது அவரை கொலை செய்தவர்களை பழிவாங்க பாடல் பாடி சபதம் எடுத்துள்ளனர்.

 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon