கல்லூரி மாணவர்களிடம் கட்டணம் கேட்டு வற்புறுத்தக் கூடாது..!
கல்லூரி மாணவர்களிடம் கட்டணம் கேட்டு வற்புறுத்தக் கூடாது என்று அனைத்து கல்லூரிகளுக்கும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அகில இந்திய கல்வி தொடர்பான தொழில்நுட்ப கல்வி குழுவானது ஏஐசிடிஇ யின் தலைவர் அனில் நாடு முழுவதும் இருக்கக்கூடிய உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறார். அதில் பல்வேறு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக பொருளாதாரத்தில் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கக் கூடிய சூழலில் கல்லூரி மாணவர்களை உடனடியாக மூன்று கட்டணங்களையும் கேட்டு தொந்தரவு கொடுக்கக்கூடாது என்று தெரிவித்திருக்கிறார்.






