சித்தப்பா , சித்தியை வீடு புகுந்து வெட்டிக்கொன்ற இளைஞன்..!
கிருஷ்ணகிரியில் நிலத்தகராறில் சித்தப்பா , சித்தியை வீடு புகுந்து வெட்டிக்கொன்ற இளைஞனையும், அவன் நண்பனையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி வீரப்பன் நகரைச் சேர்ந்த புகழேந்திக்கும் அவர் அண்ணன் இளங்கோவனுக்கும் இடையே நிலத் தகராறு இருந்து வந்துள்ளது.
இன்று காலை இளங்கோவன் மகன் லோகேஷ் தனது நண்பன் சதீஷ் உடன் கிருஷ்ணகிரிக்கு வந்து சித்தப்பாவையும் அவர் மனைவியையும் அரிவாளால் வெட்டியுள்ளனர்.
தடுக்க வந்த எதிர்வீட்டினரையும் வெட்டிவிட்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் அவர்கள் தப்பி சென்றதாக கூறப்படுகிறது. வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பிச் சென்ற லோகேஷ் அவனது நண்பன் சதீஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






