மருத்துவ பணியாளர்களுக்கு 5 கோடி ரூபாய் ஊக்கத்தொகை..!
புதுச்சேரியின் கொரொனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதற்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையத்தை ஆய்வு செய்த பின்பு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்றும் பொதுமக்கள் கட்டுப்பாடுடன் இருந்தால் மட்டுமே கொரொனா பரவலை தடுக்க முடியும் என்றும் கூறினார்.






