உயிருடன் இருக்கும் போதே நடிகை விந்தியாவிற்கு ஒட்டப்பட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டர்..!
உலகத்திலேயே தனது கண்ணீர் அஞ்சலி போஸ்டர் பார்த்து தானே சிரிக்கும் பாக்கியம் சிலருக்கு தான் கிடைத்துள்ளது என்றும் அவர்களின் நானும் ஒருத்தி என்று நடிகையும் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளருமான விந்தியா தெரிவித்துள்ளார்.
1999ஆம் ஆண்டு வெளியான சங்கமம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார். விந்தியா வராக நதிக்கரை ஓரம் பாடல் ஃபேமஸானது.
விந்தியாவின் அடுத்தடுத்த படங்கள் வெளிவந்தனவா என்று கேட்கும் அளவிற்கு புஷ்வானம் ஆனது. தான் உயிருடன் இருக்கும்போதே ஒரு சிலர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி இருப்பதாகவும், இது போன்ற போஸ்டர்களில் பார்த்தால் ஆயுள் கூடும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் விந்தியா பதிவிட்டுள்ளார்.






