--- --:--:-- --

மேற்கு வங்கத்தில் நாளை கடைசி கட்ட தேர்தல் நடைபெறுகிறது..!

3

மேற்கு வங்கத்தில் நாளை எட்டாவது மற்றும் கடைசி கட்டமாக 35 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6.30 மணிக்கு முடிவடைய உள்ளது. 11,860 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

 

கடைசி கட்ட தேர்தலில் வாக்களிக்க 84 லட்சத்து 77 ஆயிரத்து 728 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல்களில் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

வாக்குபதிவு நடைபெறவிருக்கும் தொகுதிகளில் 11 தொகுதிகள் ரெட் அலர்ட் ஆக அறிவிக்கப்பட்டுள்ளன. 35 தொகுதிகளில் களம் காணும் 283 வேட்பாளர்களில் 64 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.

 

தேர்தல் ஆணையம் விதிமுறைகளின்படி கிரிமினல் வழக்குகளை பின்னணியாக கொண்ட மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி ரெட் அலர்ட் தொகுதியாக கருதப்படும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon