இரு காவலர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு..!
திண்டுக்கல்லில் விசாரணை கைதியை சிறையில் உயிரிழந்த வழக்கில் காவல்துறை சார்பு ஆய்வாளர் மற்றும் இரு காவலர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அடுத்த பகுதியை சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவர் கத்தியை காட்டி மிரட்டியதாக சுரேஷ் குமார் என்பவர் வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் வடமதுரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முத்துசாமி, தலைமை காவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் காவல் நிலையத்தில் செந்தில்குமாரிடம் விசாரணை செய்துள்ளனர்.
அப்போது விசாரணை கைதி செந்தில்குமார் உடலில் காயங்களுடன் காவல் நிலையத்தில் வைத்தே மரணமடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இது தொடர்பான வழக்கு திண்டுக்கல் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதில் வடமதுரை சார்பு ஆய்வாளராக பணியாற்றிய திருமலை முத்துசாமி 11 ஆண்டுகள் சிறை 6,000 ரூபாய் அபராதமும் காவலர் ரவிச்சந்திரன், பொன்ராம் ஆகியோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





