தேசிய கல்விக் கொள்கை மொழி பெயர்ப்பில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு இருப்பதால் அதிர்ச்சி..!
தேசிய கல்விக் கொள்கையின் மாநில மொழிகளில் தமிழ் இல்லாதது சற்று அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. தேசிய கல்வி கொள்கை 2020 இல் அனைத்து மாநில மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் அந்தந்தமொழி பெயர்க்கப்பட்டு மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், உள்ளிட்ட 17 மொழிகளில் புதிய தேசிய கல்வி கொள்கை மொழிபெயர்க்கப்பட்டு இருக்கும் நிலையில் தமிழில் மொழிபெயர்ப்பு இடம்பெறவில்லை.
இந்தியாவில் அதிக மக்கள் பேசக்கூடிய மொழிகளில் ஒன்றான தமிழில் புதிய கல்வி கொள்கை வெளியாகதது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது. இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் புதிய தேசிய கல்வி கொள்கை மொழிபெயர்க்கப்பட்டு இருக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.






