--- --:--:-- --

வாக்கு எண்ணிக்கை மையத்தில் லேப்டாப்புடன் சுற்றித்திரிந்த வாலிபரால் பரபரப்பு..!

2

திருச்சியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் லேப்டாப்புடன் சுற்றித்திரிந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. விசாரணையில் அவர் சிசிடிவி கேமரா பொருத்த வந்தவர் என தெரிய வந்தது. திருச்சி, மேற்கு தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சுப்ரமணியபுரம் ஜமால் முகமது கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.

 

இங்கு வந்தவர் லேப்டாப்புடன் சுற்றி திரிந்த நிலையில் அவரிடம் திமுக முகவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .இதனையடுத்த தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் ரமேஷ் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.

 

விசாரணையில் அந்த இளைஞர் சிசிடிவி கேமரா பொருத்த வந்தவர் என்றும் பல்வேறு மையங்களில் அவர் இந்த பணியில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது. மேலும் இதற்காக கொண்டு வந்ததாகவும் அந்த இளைஞர் கூறியுள்ளார். இதனால் மையத்தில் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் காவல் துறையினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon