--- --:--:-- --

ஆந்திராவில் இன்றுடன் இரவு நேர ஊரடங்கு அமல்..!

4

ஆந்திராவில் கொரொனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இன்றுடன் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நடந்த அவசரக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இரவு நேரங்களில் மருந்து பொருட்கள் மற்றும் பால் போன்ற அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

 

அதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக கொரொனா தடுப்பு ஊசி செலுத்தப்படும் என அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon