பாடகியின் 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை..!
பிரபல பின்னணி பாடகியின் 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஹைதராபாத்தை சேர்ந்த பிரபல பின்னணி பாடகி தனது 15 வயது மகளை தனது தங்கையின் வீட்டில் தங்க வைத்துள்ளார்.
கடந்த 6 ஆண்டுகளாக தனது சித்தியின் வீட்டில் வளர்ந்த அந்த சிறுமியை கடந்த 6 ஆண்டுகளாக சித்தியின் வீட்டில் வளர்ந்த சிறுமியை கடந்த ஆண்டு பாடகி ஐதராபாத்துக்கு அழைத்து சென்றுள்ளார். சிறுமிக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போன நிலையில் சிறுமியிடம் விசாரித்தபோது தங்க வைக்கப்பட்ட இடத்தில் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை கூறியுள்ளார்.
தொடர்ந்து பாடகி அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார் கீழ்பாக்கம் மதபோதகர் சிறுமியின் சித்தி, கணவர், உறவினர், உறவினரின் மகன் உள்ளிட்ட 4 பேரை தேடி வந்தனர். இந்த நிலையில் அவர்கள் நால்வரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






