--- --:--:-- --

சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து!

4

கனமழை காரணமாக சென்னை பல்கலைக்கழக மாணவர்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.கனமழை மற்றும் புயல் காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இன்று (நவம்பர் 2ஆம் தேதி) சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

 

இந்நிலையில், நிலவும் வானிலை சூழலைக் கருத்தில் கொண்டு, சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து பல்கலைக்கழகத் துறைகளிலும் பயிலும் மாணவர்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்றைய தினம் நடைபெற இருந்த அனைத்து எழுத்துத் தேர்வுகள் மற்றும் செய்முறைத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

 

 

ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டிருக்கிறது. விடுமுறை மற்றும் தேர்வு ரத்தை சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்கள் மாணவர்களுக்குத் தெரிவிக்குமாறு பல்கலைக்கழகப் பதிவாளர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon