--- --:--:-- --

கடைக்கு சென்ற சிறுமியை கடித்து குதறிய 15 நாய்கள்.!

3

த்திரப்பிரதேசத்தில் சாலையில் நடந்து சென்ற சிறுமியை 15 தெருநாய்கள் கூட்டு சேர்ந்து கடித்து குதறும் அதிர்ச்சி காட்சி வெளியாகியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் அலிகர் பகுதியை சேர்ந்த சிறுமி கடந்த திங்கள்கிழமை தீப்பெட்டி வாங்குவதற்கு கடைக்கு சென்றுள்ளார்.

 

அப்போது அந்த சிறுமி தெருவில் சென்று கொண்டிருந்தபோது தெருநாய்கள் சிறுமியைப் பார்த்து குரைத்துள்ளன. இதனால் பயந்து போன சிறுமி ஓட தொடங்கியுள்ளார். அருகில் இருந்த சுமார் பதினைந்து தெருநாய்கள் சிறுமியை விரட்டி கடித்துள்ளன.

 

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் தெரு நாய்களை துரத்தி சிறுமியை மீட்டுள்ளனர். இதையடுத்து சிறுமி உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சிறுமியை தெரு நாய்கள் கடித்து குதறும் அதிர்ச்சிக் காட்சிகள் வெளியாகி உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon