--- --:--:-- --

வேளச்சேரி தொகுதியில் நாளை மறுவாக்குப்பதிவு..!

10

வேளச்சேரி தொகுதியில் மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று கொண்டு வரப்படுகின்றன.

 

அந்த பகுதியில் உள்ள 92வது வார்டில் இருந்து ஒரு மின்னனு வாக்கு பதிவு இயந்திரம், இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அங்கு நாளை மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

 

தேர்தல் அலுவலர் சுபலட்சுமி கண்காணிப்பில் திருவாரூரிலிருந்து வேளச்சேரி வாக்குசாவடி வைத்திருக்க மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வாக்கு பதிவுக்கு தேவையான உபகரணங்கள் இன்று கொண்டுவரப்படுகின்றன.

 

பாத்திரங்களைக் கொண்டு வரும்போது கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon